இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-09-13 19:47 GMT

வள்ளியூர்:

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, நீட் தேர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகமெங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக வள்ளியூரில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன், ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், களக்காடு செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

வள்ளியூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ராதாபுரம் ரோட்டில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 86 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்