இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-13 19:00 GMT

சிவகிரி:

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, நீட் தேர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகமெங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  சிவகிரி பஸ்நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றிய குழு சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலு, சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 154 பேரை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனுசியா தலைமையில் சிவகிரி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்