ஓட்டப்பிடாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-30 11:57 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், உயிர் காக்கும் மருந்தின் விலையை குறைக்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், 2020 -21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் அழகு, செல்வராஜ், சந்தானம், கணேசன், கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன், மூர்த்தி, முத்தம்மாள் உட்பட 32 பேரை ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்