இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-03-03 01:16 IST

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உள்ளாட்சி தூய்மை பணியாளர்களின் வேலையை பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். முறையான பி.எப்., இ.எஸ்.ஐ. வழங்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கலைமுருகன், துணைச்செயலாளர் சந்தானமுத்து, மாவட்ட துணை செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்