இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மஞ்சூர் பகுதியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-14 21:00 GMT

ஊட்டி

ஊட்டியை அடுத்த மஞ்சூர் பகுதியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர்கள் போஜராஜன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், தொழிற்சங்கத்தினர், விவசாய அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.35 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசலை லிட்டருக்கு ரூ.70-க்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.600-க்கும் வழங்க வேண்டும்.

தாய்சோலை, கேரிங்டன் எஸ்டேட் உள்ளிட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. நீலகிரியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்