கம்யூனிஸ்டு கட்சியினர் கையெழுத்து இயக்கம்
கம்யூனிஸ்டு கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.;
காரியாபட்டி,
திருச்சுழி அருகே உள்ள பண்ணைமூன்றைடைப்பு ஊராட்சிக்குட்பட்ட எர்ரம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 320-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான பேவர்பிளாக் சாலை, குளியல் தொட்டி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில் எர்ரம்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் அடைக்கலம் தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் மருதுபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.