திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-28 18:09 GMT

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு அறிவிப்பை வாபஸ் பெறக்கோரியும், உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதை கண்டித்தும் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்.காசி தலைமை தாங்கினார். ரகுமான் மகாதேவராவ், கரிசித்தன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு சக்திவேல், ஜாபர்சாதிக் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதை கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப்பெறக் கோரியும், தமிழக அரசு மின்சார கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், ஜி.எஸ்.டி. குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ரங்கன், ஜோதி, காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்