பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மனுவில் உள்ளது என்ன..?

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-07-01 11:09 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது;

பொதுக்குழு விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இரு நீதிபதிகளின் உத்தரவு அதிமுக கட்சி விதிகளில் இல்லாத 'வீட்டோ' அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது.

தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவிப்பது தவறானது. இந்த மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு வரும் வரை சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்