உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-20 19:00 GMT


உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான உண்டியல்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் ஆகியவை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை

முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்