குற்றாலத்தில் வரும் 16-ந்தேதி சாரல் விழா தொடக்கம் - மாவட்ட கலெக்டர் தகவல்

குற்றாலத்தில் வரும் 16-ந்தேதி சாரல் விழா தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2024-08-09 21:16 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 16-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை சாரல் விழா நடைபெறும் என தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சாரல் விழாவில் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சாரல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர்க்கண்காட்சி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்