பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி அரங்கத்தில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர்.ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2022-11-08 12:53 GMT

கல்லூரியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ரங்கநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் முத்துலட்சுமி கலந்து கொண்டு மாணவர்கள் கல்லூரியில் உயர்ந்த லட்சியத்தோடு ஒழுக்கத்தோடு கல்வியை நன்கு கற்க வேண்டும். கல்லூரியில் பாடத்திட்டத்தோடு தங்கள் தனி திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும், உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் உடல்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மோசஸ் முனுசாமி, கல்வி இயக்குநர் டாக்டர் ராஜா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கணேசன், பொறியாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் பேராசிரியர் தினகரன் நன்றி உரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்