வரும் 17-ம் தேதி அதிமுக. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update:2022-07-13 12:58 IST

சென்னை,

ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரமும் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்