மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

மானூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-28 21:04 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள பள்ளமடையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிளில் மானூருக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகன் முத்துகிருஷ்ணன் (23), ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வள்ளிவேல் (27) ஆகியோர் வந்த மோட்டார் ைசக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்