மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலியானார்.;

Update:2022-08-01 23:32 IST

விராலிமலை:

விராலிமலை அருகே வேலூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). இவர் அதே ஊரை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான துரை மனைவி நாச்சாம்மாள் (52) என்பவருடன் விராலிமலை அருகே உள்ள ராஜகிரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே வந்த போது எதிரே வந்த கொடிக்கால்பட்டியை சேர்ந்த சுதாகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக, ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஆறுமுகம், நாச்சாம்மாள் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்