மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வியாபாரி சாவு

ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-02 16:56 GMT

ஸ்ரீவைகுண்டம்:

சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 68). மாட்டு வியாபாரியான இவர் நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் நடந்த கோவில் விழாவுக்கு சென்று விட்டு, மாலையில் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். தெற்கு தோழப்பன்பண்ணை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து சென்று, இறந்த நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்