மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலியானார்.

Update: 2023-02-18 19:12 GMT

அன்னவாசல் அருகே மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 50). இவர், தனது மோட்டார் சைக்கிளில் கடம்பராயன்பட்டி வெட்டிமலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கவிநாரிப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மாணிக்கம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மாணிக்கம் படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்