கல்லூரி வாகனம் தீப்பிடித்ததால் பரபரப்பு
கல்லூரி வாகனம் தீப்பிடித்ததால் பரபரப்பு
குழித்துறை,
மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான கல்லூரி வாகனத்தில் பழுது நீக்கும் பணி நேற்று மாலையில் நடந்தது. அப்போது தொழிலாளர்கள் வாகனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாகனத்தில் தீப்பிடித்தது.அந்த தீ மளமள வென்று எரிய தொடங்கியது. உடனே குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தில் எரிந்த தீயை அணைத்து, மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.