கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 20:37 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே காட்டூரை சேர்ந்த மாதேஷ் மகள் ஜீவிதா (வயது 19). இவர் எடப்பாடியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி ஜீவிதா அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஜீவிதா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜீவிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்