தோகைமலை அருகே உள்ள புதுவாடி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் தீபிகா (வயது 18). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் தீபிகா வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தீபிகாவை பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து, மாயமான தீபிகாவை தேடி வருகிறார்.