கல்லூரி மாணவி மாயம்
சின்னசேலத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
சின்னசேலம்
சின்னசேலத்தை சேர்ந்த 19 வயது மாணவி சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அவரது பெற்றோர் அதிகாலை 2 மணியளவில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. பின்னர் அக்கம் பக்கத்து இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.