கல்லூரி மாணவர் மாயம்

கல்லூரி மாணவர் மாயம்

Update: 2022-08-04 20:20 GMT

நெல்லை அருகே மேலசெவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மகன் அஜித்குமார் (வயது 17). தனியார் கல்லூரி மாணவர். அஜித்குமார் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருப்பாராம். சம்பவத்தன்று இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற அஜித்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்