சாலையின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி

கோவை அருகே சாலையின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-06-04 01:00 GMT

மதுக்கரை

தேனியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் மலுமிச்சம்பட்டி அருகே அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தன்னுடன் தங்கி இருக்கும் மாணவர் ஆகாஷ் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக மலுமிச்சம்பட்டிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிகிருஷ்ணன் ஓட்ட, ஆகாஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் 2 பேரும் டீ குடித்துவிட்டு வீடுதிரும்பினார்கள். மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த ஆகாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்