கதிர் அறுக்கும் எந்திரம் மோதி கல்லூரி மாணவர் பலி

நச்சலூர் அருகே கதிர் அறுக்கும் எந்திரம் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-04-08 18:47 GMT

கல்லூரி மாணவர் பலி

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் மேலப்பட்டி சேவகாட்டு தெருவை சேர்ந்தவர் காத்தான் மகன் ஹரிசெல்வன் (வயது19). இவர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து திருச்சி செல்லும் சூரியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நெற்கதிர் அறுக்கும் எந்திரம் ஹரிசெல்வன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹரிசெல்வன் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிலேயே பரிதாபமாக இறந்தார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து ஹரிசெல்வன் தந்தை காத்தான் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தின் டிரைவர் கடலூர் மாவட்டம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்