தந்தை புதிய 'ஷூ' வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

தந்தை புதிய ‘ஷூ’ வாங்கி தர மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-09-11 13:29 IST

சென்னை திரு.வி.க. நகர் அடுத்த வெற்றி நகர், அண்ணன் காந்தி தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவருடைய மகள் ஜோஸ்னா (வயது 17). இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோஸ்னாவின் பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் ஜோஸ்னா மட்டும் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஜோஸ்னா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திரு.வி.க. நகர் போலீசார் தூக்கில் தொங்கிய ஜோஸ்னா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜோஸ்னா தனது தந்தையிடம் புதிதாக 'ஷூ' வாங்கி தரும்படி கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ஜோஸ்னா, தனது பெற்றோர் கடைக்கு சென்ற நேரத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்