தாரமங்கலம்:-
தாரமங்கலம் நகராட்சி 9-வது வார்டு, அருணாசலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிமன்னன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு அருகில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு பக்கத்து வீட்டுக்காரரின் வாசல் வழியாக சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த கல்லூரி மாணவரான குமார் (24), மணிமன்னன் மீது கல்லால் தாக்கியத்தில் மண்டை உடைந்தது. இதில் படுகாயம் அடைந்த மணிமன்னன் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.