கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-06 22:27 GMT

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரியை நடத்த வேண்டும் என்ற மண்டல கல்லூரி கல்வி இயக்குனரின் ஆணைகளை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று கல்லூரி முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்