கல்லூரி மாணவி பலாத்காரம்; பாதிரியார் மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

பணகுடி அருகே, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிரியார் மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-14 20:24 GMT

வள்ளியூர்:

பணகுடி அருகே, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிரியார் மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாதிரியார்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை சீயோன்புரத்தை சேர்ந்தவர் டேவிட் ஜேக்கப் ராஜ். இவர் கலந்தபனையில் கிறிஸ்தவ சபை வைத்து பாதிரியாராக இருந்து வருகிறார். இவருடைய மகன் அனிஸ் பவுல் (வயது 25).

அந்த கிறிஸ்தவ சபைக்கு 22 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கிறிஸ்தவ சபைக்கு வந்த கல்லூரி மாணவிக்கும், அனிஸ் பவுலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்து வந்தனர்.

பாலியல் பலாத்காரம்

மேலும், திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அனிஸ் பவுல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அனிஸ் பவுலை வலியுறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்து அந்த மாணவியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதற்கு அவருடைய தந்தை பாதிரியார் டேவிட் ஜேக்கப் ராஜ், தாயார் பிரின்ஸ் ஆகிேயார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

வலைவீச்சு

இந்தநிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய அனிஸ் பவுல் மற்றும் பாதிரியார் டேவிட் ஜேக்கப் ராஜ், பிரின்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவி, வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனிஸ் பவுல் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்