கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், கல்லூரி பேரவை தொடக்கவிழா

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், கல்லூரி பேரவை தொடக்கவிழா நடைபெற்றது.

Update: 2022-08-25 10:02 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், 'கல்லூரி பேரவை' தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாணவியர் ரூபலட்சுமி, ஜெ.சுபலட்சுமி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். கணிதவியல்துறை உதவி பேராசியரும், கல்லூரி பேரவை செயலாளருமான க.சுதா வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி இணைப்பேராசிரியை ரா.தனலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவியர் பேரவை தலைவர், செயலர், துணைச்செயலர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசினார். கணிதவியல் துறை மாணவி செ.சுஜிதா பேரவை தலைவியாகவும், வேதியியல் துறை மாணவி இ.அஜிநேசா செயலாளராகவும், வணிகவியல்துறை மாணவி க.ஹரிஷ்மா துணைச் செயலாளராகவும் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர். கணிதவியல் துறை மாணவி பி.தெரஸ் அன்னம்மாள் ரிந்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவியர் ேபரவை தலைவி சுஜிதா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேரவை செயலாளர்கள் க.சுதா, ரா.கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்