சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து கலெக்டர் ஆய்வு

சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2022-11-21 00:15 IST

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சாமியார்பேட்டையில் கடற்கரை பகுதி அமைந்துள்ளது, இங்கு விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பொழுதை கழித்துவிட்டு செல்வார்கள். அவ்வாறு வரும் மக்களின் வசதிக்காக சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து அங்கு சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாமியார்பேட்டை கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 'சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள சிறு கடைகளை ஒரே வரிசையில் வைக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது

கடலூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் முத்துசாமி, கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர் சுப்பிரமணியன், புவனகிரி தாசில்தார் ரம்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சுப்பிரமணியன், மாவட்ட சுற்றுலாத்துறை துணை அலுவலர் ரமேஷ் பாபு, சிலம்பிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராஜேந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள், சிலம்பிமங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்