துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

Update: 2022-08-26 19:46 GMT

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன்.முருகேசன் ஆதரவாளர்களுடன் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்த மனுவில், பட்டியல் சமுதாய மக்களுக்காக தொடர்ந்து போராடுவதால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போ அல்லது துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கக்கோரி உத்தரவிட்டது. ஆனால் இதுவரை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே எனக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்