மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு

மணிமேகலை விருது பெற்ற மகளிர் குழு உறுப்பினர்களை கலெக்டர் பாராட்டினார்.;

Update:2023-01-02 23:41 IST

கடந்த 29-ந் தேதி நடந்த அரசு நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த சுய உதவிக் குழுவாக (நகர்ப்புறம்) ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அமுதம் மகளிர் சுய உதவிக் குழு தேர்வு செய்யப்பட்டு மணிமேகலை விருதினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். அந்த விருதினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம், மகளிர் சுய உதவிக்குழுவினர் காண்பித்து வாழ்த்து பெற்றனர். ்அவர்களை கலெக்டர் பாராட்டினார்.

அப்போது மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், உதவி திட்ட அலுவலர் சுபாஷ் சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்