ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர்

ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தைக்கு கலெக்டர் பெயர் சூட்டினார்.

Update: 2022-06-21 16:58 GMT

திருவண்ணாமலை தாலுகா அத்தியந்தல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகே பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கடந்த 13-ந்தேதி மீட்கப்பட்டது.

அந்த குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அந்த ஆண் குழந்தைக்கு சிவராஜ் என்று பெயர் சூட்டினார். பின்னர் அந்த குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார்.

அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, குழந்தைகள் நல குழும உறுப்பினர் தேவேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்