சுங்கச்சாவடி அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு

கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-04-06 18:45 GMT

விழுப்புரம்:

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து மாவட்ட கலெக்டர் சி.பழனி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்வதில் இடர்பாடுகள் ஏற்படும் என விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமையவுள்ள இடம் தேர்வு குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, விழுப்புரம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை விரிவாக்க திட்ட இயக்குனர் சக்திவேல், தனி தாசில்தார் (நில எடுப்பு) திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்