மீன் வளர்ப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

வாலாஜா ஒன்றியத்தில் மீன்வளர்ப்பு குறித்து கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

Update: 2023-10-26 19:30 GMT

மீன் வளர்ப்பு

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அம்மனந்தாங்கல் ஊராட்சியில் மீன் பண்ணைகள் அமைத்து மீன் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர் பாகவெளி ஊராட்சி காட்டேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்து வருவதை பார்வையிட்டு கேட்டறிந்தார்.

விதைப்பண்ணை

இதனைத் தொடர்ந்து முசிறி ஊராட்சியில் விதைப்பண்ணை அமைத்து விதை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலத்தினை பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், தோட்டக்கலை துணை இயக்குனர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தபேந்திரன், உதவி இயக்குனர்கள் திலகவதி, வேலு, கால்நடைத்துறை உதயசங்கர், மீன்வளத்துறை வேலன், கால்நடை மருத்துவர்கள் ரகு, மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்