காலை உணவு திட்ட முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஆம்பூரில் காலை உணவு திட்ட முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமரகுஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி ஆணையர்கள் ஷகிலா, மாரிசெல்வி, ஆம்பூர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.