தீனபந்து ஆசிரமத்தில் கலெக்டர் ஆய்வு

வாலாஜா தீனபந்து ஆசிரமத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செயதார்.

Update: 2023-09-01 18:50 GMT

வாலாஜாபேட்டை தீனபந்து ஆசிரமத்தில் 80 மாணவ- மாணவியர் உள்ளனர். தாய், தந்தையை இழந்த மற்றும் ஏழை எளிய மாணவ- மாணவிகள் தங்கி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கலெக்டர் வளர்மதி ஆசிரமத்தில் ஆய்ரு மேற்கொண்டார். அப்போது ஆசிரமத்தில் உள்ள வசதிகள், மாணவர் மாணவிகள் தங்கும் அறைகள், அவர்களுக்கான கழிப்பறை வசதிகள் மற்றும் உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் இல்லம் தேடி கல்வியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதை பார்வையிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, ஆசிரம நிர்வாக பாரதி மற்றும் சுரேஷ், தாசில்தார் வெங்கடேசன், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்