தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு 1.1.2018 அன்றோ அல்லது அதன்பிறகு பெற்ற சாதனைகள் தகுதியாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெறுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்று இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டு அரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்