பருத்தி விவசாயிகள், வியாபாரிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விவசாயிகள், வியாபாரிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

Update: 2023-06-21 19:15 GMT

பொறையாறு;

செம்பனார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் தங்களது வயலில் சாகுபடி செய்த பருத்தியை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம்) பருத்தி ஏலம் தொடங்கியது.இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி ஆய்வு நடத்தினார். பின்னர் கலெக்டர் கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:-ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். அவர்கள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்யும் விளைபொருட்களை ஏலம் எடுக்கும் போது எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது. தற்போது விவசாயிகள் தெரிவித்த உரிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், நாகை வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் வெற்றிவேல், நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்