அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவர்களுக்கு தயார் செய்த சத்துணவை ருசி பார்த்தார்

பள்ளிப்பட்டு தாலுகா அருகே அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு தயார் செய்த சத்துணவை ருசி பார்த்தார்.;

Update:2022-09-08 14:12 IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் மற்றும் பாலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா? என்று அவர் மாணவர்களிடம் கேட்டு அறிந்தார். அதன் பின்னர் அம்மையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்ற கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு தயார் செய்து வைத்திருந்த சத்துணவை அவர் ருசி பார்த்து தரத்தை சோதித்தார். அதன் பிறகு பள்ளி கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்தார். அங்கு ஏதேனும் வசதிகள் குறைவாக இருக்கிறதா? என்று கேட்டு அறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்