வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

திமிரி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டபணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2023-09-21 23:25 IST

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 65 லட்சத்தில் கான்கிரீட் சாலை, பிள்ளையார் கோவில் பகுதியில் ரூ.85 லட்சத்தில் காங்கிரீட் சாலை, ரூ.19 லட்சத்தில் கழிவுநீர் குட்டை ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்கள் உடனடியாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் உத்தரவிட்டார்.

சத்துணவு

மேலும் கலவை பேரூராட்சி 12-வது வார்டில் அங்கன்வாடி கட்டும் இடத்தை பார்வையிட்ட அவர் மாந்தாங்கல் ஊராட்சியில் சத்துணவு கூட்டத்தில் குழந்தைகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகளையும் பரிசோதித்து பார்த்தார். தொடர்ந்து மாந்தாங்கில் அமைந்துள்ள தார் சாலையை அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மாந்தாங்கல் நல்லூர், டி.புதூர், நேத்தப்பாக்கம், கணியனூர் ஊராட்சிகளில் நடைபெற்றுள்ள பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், சிவக்குமார், கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அம்சா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தியாகராஜன், கலவை செயல் அலுவலர் முத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆதிலட்சுமி, ராஜம்மாள், சத்யா சத்தியமூர்த்தி, ரேணுகா சங்கர், மலர், சுகந்தி கோகுல்ராஜ், ரேகா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, பேரூராட்சி உறுப்பினர்கள் நித்யா, சக்தி, நேதாஜி, பிரபு, காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்