கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-16 15:58 GMT

மயிலாடுதுறையில் ரூ.114½ கோடியில் நடைபெற்று வரும் கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணி

மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைத்தளத்துடன் கூடிய 8 மாடிகளுடன் கலெக்டர் அலுவலக கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணியை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தளத்திலும் அமைய உள்ள அலுவலகங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

தரக்கட்டுப்பாடு அலுவலகம்

மேலும், அங்குள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகவேலு மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோர் உடனிருந்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்