சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-05 13:30 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் முதற்கட்டமாக பே கோபுரத்தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது பேகோபுரத்தெருவில் உள்ள கிருஷ்ண லாட்ஜ் முதல் அம்மணி அம்மன் கோபுரம் செல்லும் தெரு இணையும் பகுதி வரை 200 மீட்டர் அளவில் புதிதாக சாலை பள்ளம் தோண்டி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் நகராட்சி மூலம் 9 பாதாள சாக்கடை குழி புதியதாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கான கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் சிமெண்டு சாலை அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்படாமல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் போலீசார் போக்குவரத்துக்களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றார்.

அப்போது திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி கலெக்டர் மந்தாகினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்