மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார்.

Update: 2023-06-02 17:16 GMT

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் ரெயில் நிலையம் சாலையில் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது. இங்கு 79 ஆண்கள், 49 பெண்கள் என மொத்தம் 128 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மறுவாழ்வு இல்லத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உணவு மற்றும் சிகிச்சை அளிப்பவர்களின் விவரங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் எந்த ஊர், இங்கு நன்றாக கவனித்துகொள்கிறார்களா?, ஏதேனும் குறைகள் உள்ளதா?, உணவு சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிறதா என மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் கேட்டறிந்தார்.

மரக்கன்றுகள்

அதனை தொடர்ந்து திருப்பத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் வாகை, நாவல், பூவரசன், பாதாம், மாதுளை, அவிஞ்சி, விளாம் உள்ளிட்ட பல்வேறு வகையான 30 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியையும், 150 மூலிகை மரங்கள் பராமரிக்கப்பட்டுவருவதையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மரக்கன்றுகளை நன்றாக பராமரித்து சரியான நேரத்தில் நடவு செய்ய வேண்டும் என கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் பிரபாவராணி, முடநீக்கு வல்லுனர் இனியன், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் மற்றும் இல்ல பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்