செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் சிகிச்சை பிரிவை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவை நேரில் பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார், பிறகு நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் நாராயணசாமி, டாக்டர்கள், நர்சுகள் உடன் இருந்தனர்.