அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்து, குழந்தைகளின் கற்றல்திறனை கேட்டறிந்தார்.

Update: 2023-09-30 17:36 GMT

கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூரில் பழுதடைந்திருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு என்.ஆர்.ஜி.எஸ். திட்டம் மற்றும் ஊராட்சி மன்ற பொது நிதி மூலம் ரூ.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி செயல்பட்டு வருகிறது.

புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மையத்தின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் குழந்தைகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள், குழந்தைகள் படிப்பதற்கு எளிதாக ஆங்கில எழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள் போன்றவை எழுதப்பட்டு இருந்தது.

கற்றல் திறன்

அதை பார்த்த கலெக்டர், ஓவியங்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்து குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஊராட்சி மன்ற தலைவர் எம்.மகேந்திரன், ஊராட்சி செயலாளர் மகேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்