'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அரசு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-01-15 08:33 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-வது முதல் பளஸ்-2 வகுப்பு வரை பயிலும் 20 மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலெக்டர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், பள்ளி துணை ஆய்வாளர் சௌத்ரி, மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்