ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

சோளிங்கரில் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2022-09-08 00:21 IST

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென்வன்னியர் தெரு, கொண்டபாளையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளை கலெக்டபர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரம், பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா எனவும், உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். சேதம் அடைந்து பயன்படாமல் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்