தும்பேரி அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாணியம்பாடி அருகே தும்பேரி அரசு பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-07-22 18:58 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தும்பேரி அரசு பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு நடத்தினார்.

வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு குடிநீர், கழிவறை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தும்பேரி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள 4 கட்டிடங்களின் மேற்கூரையை சரிபார்க்க வேண்டும் எனவும், குடிநீர், சமையலறையில் உள்காற்றை வெளியேற்றும் மின்விசிறி அமைக்க வேண்டும் எனவும்,

தற்போதுள்ள பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள பழைய கழிவறை உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும், மேலும் இப்பள்ளி வளாகத்தில் ரூ.11.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் கழிவறை கட்டிடப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆணையிட்டார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, ரகுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்