பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி தொடர நடவடிக்கை- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-10-20 19:15 GMT

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

வழிகாட்டல் முகாம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு உயர் கல்வி தொடராத மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டல் முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் சென்ற கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடர்கிறார்களா? என்பதனையும், அவ்வாறு உயர்கல்வி தொடராத மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை களைந்து அவர்கள் உயர்கல்வி தொடர தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கையில் முன்னேற்றம்...

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சென்ற கல்வி ஆண்டில் 13 மாணவர்கள் உயர்கல்வி தொடரவில்லை என கண்டறியப்பட்டது. இந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதனை சரியான முறையில் பயன்படுத்தி அந்த மாணவர்கள் உயர்கல்வியினை தொடர்ந்து மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முகாமில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், மாயகிருஷ்ணன், சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்