கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-07 16:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10 நபர்கள் குழு

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நவீன சலவையகங்கள் அமைக்க 10 நபர்களை கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவிற்கு நவீனமுறை சலவையகம் அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் 10 பேர் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

வயது வரம்பு

இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்